'பாகமதி' அனுஷ்கா ஃபர்ஸ்ட் லுக்

'பாகமதி' அனுஷ்கா ஃபர்ஸ்ட் லுக்
'பாகமதி' அனுஷ்கா ஃபர்ஸ்ட் லுக்

அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள 'பாகமதி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

கோலிவுட், டோலிவுட்டில் அனுஷ்காவிற்கு எப்போதுமே ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அதுவும் பாகுபலி படத்திற்கு பின் அவரின் ரசிகர்கள் பட்டாளம் பலமடங்கானது. படத்தில் பிரபாஸுக்கு இணையாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அனுஷ்கா. இந்நிலையில் பாகுபலி வெற்றிக்கு பின்பும், அப்படத்திற்கே சவால் விடும் புதிய படம் ஒன்றில் அனுஷ்கா நடித்து வருகிறார். படத்தின் பெயர் 'பாகமதி'. தமிழ் மற்றும் தெலுங்கில் படம் தயாராகி வரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நாளைய தினம் அனுஷ்கா தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அனுஷ்கா  ஸ்லிம்மாக  இருக்கிறார். அதுவும் மற்ற படங்களில் இருப்பதை காட்டிலும் சற்று வித்தியாசமாக உள்ளார். ஒரு கையில் ஆணி வைத்து அடிக்கப்பட்டது போலவும், மறுகையில் ரத்தம் சொட்டும் சுத்தியலுடன் அனுஷ்கா போஸ்டரில் இடம்பெற்றுள்ளார். ஜி.அசோக் இயக்கி வரும் இந்தப் படம் வரும் ஜனவரியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com