அனுஷ்காவுக்காக 5 வருடம் காத்திருந்த இயக்குனர்!

அனுஷ்காவுக்காக 5 வருடம் காத்திருந்த இயக்குனர்!
அனுஷ்காவுக்காக 5 வருடம் காத்திருந்த இயக்குனர்!

அனுஷ்கா, உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத் உட்பட பலர் நடித்துள்ள தெலுங்கு படம், ’பாகமதி’. அசோக் இயக்கியுள்ள இந்தப் படம் இதே பெயரில் தமிழிலும் வெளியாகிறது. தமன் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஆர்.மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். 

படம் பற்றி இயக்குனர் அசோக் கூறும்போது, ’இந்தப் படத்தில் அனுஷ்காவைத் தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியாது. இந்த கேரக்டருக்கு அவர்தான் பொருத்தமானவர். கடந்த 2013-ம் ஆண்டு அனுஷ்காவை சந்தித்து இந்தக் கதையை சொன்னேன். அவர் ’கண்டிப்பாக நடிக்கிறேன், ஆனால் ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும்’ என்றார். அவர் பாகுபலி, ருத்ரமாதேவி படங்களை முடித்துவிட்டு வரவேண்டி இருந்தது. நான் அவருக்காகக் காத்திருந்தேன். இந்த கேரக்டரை அவர் நியாயப்படுத்தி இருக்கிறார். படத்தில் கிராபிக்ஸுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். கதைக்காக பழங்கால பங்களா ஒன்று தேவைப்பட்டது. இந்தியா முழுவதும் தேடியும் நாங்கள் எதிர்பார்த்த மாதிரி கிடைக்கவில்லை. இதையடுத்து ஐதராபாத்தில் பிரமாண்ட செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தினோம். ஆர்ட் டைரக்டர் ரவீந்திரன் இதை அமைத்தார். படத்தின் ஹைலைட்டான விஷயங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்’ என்றார். 
இந்தப் படம் நாளை ரிலீஸ் ஆகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com