சினிமா
யோகாவுக்கு ட்வீட் போட்ட நடிகை..... ட்ரோல் செய்த நெட்டிசன்கள்
யோகாவுக்கு ட்வீட் போட்ட நடிகை..... ட்ரோல் செய்த நெட்டிசன்கள்
டெல்லி உள்ள ஒரு பிரபல தொலைக்காட்சியில் சாஞ்ச் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அனெரி வஜானி, 23 வயதாகும் இவர், சர்வதேச யோகா தினத்தையொட்டி, தனது படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். உங்கள் மூச்சை உங்களால் அடக்க முயன்றால் உங்கள் அமைதியை யாராலும் திருட முடியாது, ஹேப்பி யோகா என வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
ஆனால் அவர் போட்ட பதிவைப் பற்றி கருத்துச் சொல்லாத பாலோயர்கள், அவரின் புகைப்படத்தைப் பற்றி கலாய்க்க ஆரம்பித்தனர். நடிகை அனெரி வஜானி மிகவும் ஒல்லியாகவும், அருவருப்பாகவும் உள்ளதாக கருத்தைப் பதிவு செய்தனர். எதற்கும் அசராத அனெரி வஜானி, என்னுடைய புகைப்படத்தை பார்ப்பதில் உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால் நீங்கள் அதனை பார்க்காமல் தவிர்த்துவிடுங்கள், கடவுள் அனைத்தையும் சரிசெய்வார், நன்றி என பதிலுக்கு பதிவிட்டிருந்தார்.

