\
நடிகை அனுஷ்காவுக்கு பீட்டா விருது

நடிகை அனுஷ்காவுக்கு பீட்டா விருது

நடிகை அனுஷ்காவுக்கு பீட்டா விருது
Published on

விலங்குகள் நலனுக்காக சிறந்த பங்களிப்பை அளித்ததாக இந்த ஆண்டின் பீட்டா பிரபலம் என்ற விருதை பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா பெற்றுள்ளார். 

தத்தெடுத்த வளர்ப்பு நாயை பாதுகாத்து வருவதுடன் விலங்குகளின் நலனுக்கு ஆதரவான பணிகளில் அனுஷ்கா ஈடுபட்டுள்ளதாக பீட்டா அமைப்பின் இணை இயக்குனர் சச்சின் பங்கரா தெரிவித்துள்ளார். 
மும்பை உள்ளிட்ட மகாராஷ்ட்ராவின் பல பகுதிகளில் குதிரை வண்டிகளில் கூடுதல் சுமை ஏற்றப்படுவதன் மூலம் குதிரைகள் துன்புறுத்தப்படுவதை தடை செய்யவும் அவர் வலியுறுத்தியுள்ளார். விலங்கு நல அமைப்பான பீட்டாவின் ஆண்டு விருதை இதற்கு முன் நடிகர் மாதவன், நடிகை ஹேமமாலினி மற்றும் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் உள்ளிட்ட பலர் பெற்றுள்ளனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com