
ஒரு இன்வஸ்டிகேஷன் படத்திற்குள் சினிமா பின்னணி சேர்த்து கூறியிருந்த படம் `Rekhachithram'. மம்மூட்டியை படத்திற்குள் பயன்படுத்தியிருந்த விதமும் பெரிய அளவில் பாராட்டப்பட்டது.
தங்க நகையை மீட்கும் போராட்டத்தில் பெண்ணின் சிக்கல்களை பேசியது `Ponman'. மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது படம்.
தாயின் மரணத்திற்காக பூர்வீக வீட்டுக்கு வரும் சகோதரர்கள் பற்றிய படம் `Narayaneente Moonnaanmakkal'. மிக இயல்பாக மனித உணர்வுகளை பேசியது படம்.
பாக்சிங் கற்றுக்கொள்ள வரும் இளைஞர்களை பற்றிய கதையை ஜாலியாக சொன்னது `Alappuzha Gymkhana'.
ஊரின் எல்லையை இரவில் கடந்தால் மரணம் என்ற சூழல், இதனை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களே Sumathi Valavu கதை.
இந்தாண்டின் பெரிய சூப்பர்ஹிட் படம் `Lokah'. அதீத சக்திகள் கொண்ட பெண் நகரத்துக்குள் வந்த பின் நடக்கும் அதிரடிகளே கதை.
தனக்கு இதய தானம் கொடுத்தவரின் குடும்பத்தை சந்திக்க செல்லும் ஒருவரின் கதையே `Hridayapoorvam'. மிக அழகான படமாக பலரது கவனத்தையும் ஈர்த்தது.
பெண்களை பற்றி புரணி பேசும் ஒரு ஊரில், ஒரு சிலர் செய்யும் விஷயங்களே `Avihitham' கதை.
தன் வீட்டில் நிகழும் அமானுஷ்ய விஷயங்களை எதிர்கொள்ளும் இளைஞனின் கதையே `Diés Iraé'.
காணாமல் போன எஜமானரை தேடும் ஒருவனின் கதையே `Eko'.
சீரியல் கில்லர் ஒருவரை துரத்தும் காவலரின் கதையே `Kalamkaval' மம்மூட்டியின் வில்லத்தனம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
தன்னுடன் பேய் இருக்கிறது என உணரும் இளைஞன் பற்றிய ஜாலியான கதையே `Sarvam Maya'. ஒரு ஃபீல்குட் படமாக பலரையும் கவர்ந்தது.