
ஒரு மிஸ்ட்ரி த்ரில்லர் படமாக வந்தது `Agnyathavasi'. ஒரு அமைதியான கிராமத்தில் திடீரென நிகழும் ஒரு குற்றம், அதை விசாரிக்கும் ஒரு காவலர் என சுவாரஸ்யமான படம்.
ஓர் இளைஞனின் வாழ்க்கையில் வரும் சவால்களை வித்தியாசமாகச் சொன்ன படம் `Firefly'. விஷுவலாக நல்ல அனுபவத்தைக் கொடுத்த இப்படத்தில், சிவராஜ்குமாரின் கெஸ்ட் ரோல் சுவாரஸ்யம் சேர்த்தது.
வாழ்வில் பெரிய இழப்புகளைச் சந்தித்த 11வயது சிறுவன், தன்னைப் பற்றியும் வாழ்வைப் பற்றியும் புரிந்துகொள்வதை சொல்வதே `Mithya'. தரமான ஒரு சின்ன பட்ஜெட் படம்.
இவ்வருடத்தில் அதிகம் பேசப்பட்ட ஒரு கன்னடப் படம். ஓர் இளைஞன் உடலில் பெண்ணின் பேய் புகுந்துவிட்டதாக ஒரு கிராமமே நம்ப துவங்க, அதைத் தொடர்ந்து நடக்கும் கலாட்டாக்களே `Su From So' படம். சிறப்பான காமெடி படம்.
அதிக வசூல் செய்து இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்கவைத்த படம் `Kantara: Chapter 1'. காந்தாரா உலகத்தைச் சேர்ந்த அதன் மூலக்கதையாக வந்த இப்படம், ஓர் அருமையான விஷுவல் அனுபவம்.