கர்ணன் தெலுங்கு ரீமேக்... விருப்பம் தெரிவித்த இளம் ஹீரோ!

கர்ணன் தெலுங்கு ரீமேக்... விருப்பம் தெரிவித்த இளம் ஹீரோ!
கர்ணன் தெலுங்கு ரீமேக்... விருப்பம் தெரிவித்த இளம் ஹீரோ!

தெலுங்கு சினிமாவின் இளம் ஹீரோ பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், கர்ணனின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கலைப்புலி தாணு தயாரிப்பில் திரையரங்குகளில் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியானது கர்ணன் திரைப்படம். சந்தேஷ் நாராயணனின் உயிரோட்டமான இசையும், தனுஷின் பக்குவமான நடிப்பும், மாரி செல்வராஜின் அற்புதமான திரைக் கதையும், தேனி ஈஸ்வரின் அழகியலும், வாழ்வியலும் கொண்ட ஒளிப்பதிவும் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை உண்டு செய்தது. இத்திரைப்படம் பல்வேறு விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலிலும் படம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கிடையே, கர்ணனின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க பிரபல நடிகர் ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக ஆந்திர தேசத்தில் இருந்து வரும் செய்திகள் சொல்கின்றன. அவர் வேறு யாருமல்ல, தெலுங்கு சினிமாவின் இளம் ஹீரோ பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் தான். தமிழ் திரைப்படமான ராட்சாசனின் ரீமேக்கில் ஏற்கனவே நடித்து வெற்றி வாகை சூடியவர் சாய் ஸ்ரீனிவாஸ். இவர் தற்போது தெலுங்கில் ஹிட் அடித்த சத்ரபதி படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக படத்தின் பணிகள் தாமதமடைந்து வருகிறது.

இதற்கிடையே, பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் சமீபத்தில் கர்ணன் படத்தை பார்த்துள்ளார். படத்தின் கதை, திரைக்கதை என அனைத்தும் பிடித்து போக, அவரே கர்ணன் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்து இருக்கிறார். படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்ற பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெலுங்கு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உரிமையை கைப்பற்றியதும் நடிகர்கள் மற்றும் குழுவினரை தயாரிப்பாளர்கள் விரைவில் அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கர்ணன் திரைப்படம் ஒடிடி தளமான அமேசான் பிரைமில் மே 9 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு திரைப்படம் 30 நாள்கள் தியேட்டரில் வெளியான பின்பு ஒடிடியில் வெளிடலாம் என்ற விதிமுறையை பின்பற்றி மே 9 ஆம் தேதி அமேசானில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com