"'பீஸ்ட்' படத்திற்கு தடை விதிக்க வேண்டும்" - ஜவாஹிருல்லா கடிதம்

"'பீஸ்ட்' படத்திற்கு தடை விதிக்க வேண்டும்" - ஜவாஹிருல்லா கடிதம்
"'பீஸ்ட்' படத்திற்கு தடை விதிக்க வேண்டும்" - ஜவாஹிருல்லா கடிதம்

முஸ்லிம் சமூகத்தை சிறுமைப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள 'பீஸ்ட்' திரைப்படத்துக்கு தடைவிதிக்கக்கோரி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் ஜவாஹிருல்லா கடிதம் எழுதியுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள பீஸ்ட் திரைப்படம் நேற்று முன்தினம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "முஸ்லிம் சமுதாயத்தை சிறுமைப்படுத்தும் வகையில் பீஸ்ட் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் இந்தப் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பீஸ்ட் திரைப்படத்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைய வாய்ப்புள்ளது.

எனவே, பீஸ்ட் படத்திற்கு தடைவிதிப்பதோடு மட்டுமல்லாமல் வெறுப்பு அரசியலை தூண்டும் படங்களை யார் எடுத்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com