\
விஜய்யின் 'ரோல்ஸ் ராய்ஸ்' காரில் ஒரு பீஸ்ட் பயணம்

விஜய்யின் 'ரோல்ஸ் ராய்ஸ்' காரில் ஒரு பீஸ்ட் பயணம்

விஜய்யின் 'ரோல்ஸ் ராய்ஸ்' காரில் ஒரு பீஸ்ட் பயணம்
Published on

நடிகர் விஜய் தமது ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரில் பீட்ஸ் படக்குழுவினரை அழைத்துச்சென்று உற்சாகப்படுத்தினார்.

நடிகர் விஜய் ஓட்டிச்சென்ற அந்த சொகுசு காரில் இயக்குநர் நெல்சன், மனோஜ், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், சதீஷ் ஆகியோர் பயணித்தனர். பீஸ்ட் படப்பிடிப்பின்போது காரில் பயணித்த வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே 'பீஸ்ட்' மோடில் இருக்கும் ரசிகர்களுக்கு இந்த வீடியோ மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.



தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், ‘மாஸ்டர்’ வெற்றிப் படத்திற்குப் பிறகு நடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசைமையத்துள்ளார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

 
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், வருகிற ஏப்ரல் 13-ம் தேதி ‘பீஸ்ட்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது, இந்தப் படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. தமிழில் நேரடியாகவும், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மொழி மாற்றம் செய்தும் வெளியிடப்படுகிறது. இதில், இந்தியில் மட்டும் ‘ரா’ (RAW) என்ற பெயரில் ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகிறது. ஏற்கனவே, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முதல் ட்ரெயிலர் வரை அனைத்தும் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது.


logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com