துயரங்களைத் தாண்டி மீண்டு வருவேன்: பாவனா உருக்கம்
துயரங்களையும், தோல்விகளையும் தாண்டி மீண்டு வருவேன் என்று நடிகை பாவனா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நடிகை பாவனா காரில் கடத்தப்பட்ட பின்னர் அமைதி காத்து வந்தார். அவர் கடத்தப்பட்டது தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், கடத்தல் சம்பவத்துக்குப் பின் முதன்முறையாக சமூக வலைதளம் மூலம் பாவனா மவுனம் கலைத்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாவனா, வாழ்க்கை சிலமுறை தன்னை வீழ்த்தி இருப்பதாகவும், விரும்பத்தகாத நிகழ்வுகளைக் காண நேர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தோல்வியையும், வேதனையையும் சந்தித்துள்ளதாகக் கூறியுள்ள பாவனா, ஆனால் அவற்றிலிருந்து மீண்டு வருவது மட்டும் நிச்சயம் என்று பதிவிட்டுள்ளார். பாவனாவின் பதிவினை நடிகர் பிரித்விராஜ் மற்றும் சமந்தா போன்ற பிரபலங்கள் பகிர்ந்து தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். பிரித்விராஜுடன் பாவனா இணைந்து நடிக்கும் ஆதம் படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் சமீபத்தில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.