ஜேம்ஸ்பாண்ட் படத்தை இயக்கும் பேட்மேன் இயக்குனர்
பேட்மேன் ட்ரையாலஜி, இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லர் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய கிறிஸ்டோபர் நோலன் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படத்தை இயக்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து உளவாளி ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம் உலக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மற்ற கதாபாத்திரங்களுக்கு இல்லாத சிறப்பு இந்த கதாபாத்திரத்துக்கு உண்டு. ஜேம்ஸ் பாண்ட் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்படும் நடிகர் மற்ற படங்களில் நடிக்கக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் உண்டு. கடந்த 1962ம் ஆண்டு வெளியான டாக்டர் நோ முதல் 2015ம் ஆண்டில் வெளியான ஸ்பெக்டர் வரை இதுவரை 24 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், 25ஆவது ஜேம்ஸ்பாண்ட் படத்தை இயக்குவதற்காக தயாரிப்பாளர்களான பார்பரா மற்றும் மைக்கேல் வில்சன் ஆகியோர் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நவீனகால இயக்குனர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் நோலனும், இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.