‘The Family Man-2’ இணைய தொடரை தடை செய்ய வேண்டும் : தமிழக அரசு!

‘The Family Man-2’ இணைய தொடரை தடை செய்ய வேண்டும் : தமிழக அரசு!

‘The Family Man-2’ இணைய தொடரை தடை செய்ய வேண்டும் : தமிழக அரசு!
Published on

“ஈழத்தமிழர் போராட்டத்தை இழிவுப்படுத்தும் வகையில் The Family Man சீசன் 2 இணைய தொடரின் முன்னோட்டம் உள்ளது. இந்த தொடர் ஒளிபரப்பானால் மாநிலத்தில் மதநல்லிணக்கத்தை காப்பது கடினமாகும் என்பதால் தடை செய்ய வேண்டும்” என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார். 

அமேசான் பிரைமில் இந்த The Family Man சீசன் 2 தொடர் வெளியாக உள்ளது. வரும் ஜூன் 4ஆம் தேதி முதல் இந்த சீரிஸ் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு இதற்கு தடை வேண்டி மத்திய அரசிடம் முறையிட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் தொடரை நிறுத்தவோ, தடை செய்யவோ வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த தொடரின் முன்னோட்டம் தமிழர்களின் உணர்வுகளையும் புண்படுத்தி உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com