பலூன் ட்ரெய்லர் ட்விட்டர் சென்னை ட்ரெண்ட்டில் இடம் பிடித்துள்ளது.
கோடம்பாக்கத்தில் வரிசையாக பேய்க் கதைகள் வந்த காலம் ஒன்று உண்டு. திகில் பேய், காமெடி பேய், ரவுடி பேய் என பேய்களை தினுசு தினுசாக காட்டிவிட்டார்கள். ‘அவள்’ அந்த இடைவெளியை நிரப்பியது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தத் திரைப்படம் அமோக வசூலை அள்ளியது. இந்தாண்டில் வெளியான படங்களில் அதிக லாபத்தை சம்பாத்தித்த திரைப்படமாக ‘அவள்’ இடம்பெற்றது.
இந்நிலையில் ஜெய்- அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பலூன்’ திரைப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. திகில் படமான இதன் ட்ரெய்லர் வெளியான சற்று நேரத்திற்குள் ட்விட்டரில் சென்னை ட்ரெண்ட்டில் இடம்பெற்றுள்ளது. பலூனை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இதன் ஹாரர் ஸ்டோரி வழக்கமான பேய் படத்தில் இருந்து மாறுபட்டிருக்கும் எனத் தெரிகிறது. இதனை ’70 எம்எம் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. வரும் 29ம் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகிறார்கள்.