”என்னை அரசியலுக்குள் இழுக்காதீங்க.. தாங்கமாட்டீங்க”-பிக்பாஸ் பிரபலத்தின் பரபரப்பு ட்வீட்!

என்னை அரசியலுக்கு இழுக்க வேண்டாம் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
”என்னை அரசியலுக்குள் இழுக்காதீங்க.. தாங்கமாட்டீங்க”-பிக்பாஸ் பிரபலத்தின் பரபரப்பு ட்வீட்!

தன்னை அரசியலுக்கு இழுக்க வேண்டாம் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி முருகதாஸ், நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து ’தயவு செய்து டாஸ்மாக் கடைகளை மூடுங்கள், இது ஏராளமான உயிர்களை அழித்துள்ளது, ரம்மியை ஒப்பிடும் போது குடியால் அழிந்தவர்கள் தான் அதிகம் என்று பதிவு செய்திருந்தார்.

அவருடைய இந்த ட்விட்டுக்கு கடும் விமர்சனங்கள் வந்த நிலையில் அதன் பிறகு மேலும் ஒரு ட்விட்டை பதிவு செய்துள்ளார். அதில் ‘குடியால் என்னை போன்ற பலர் அனாதையாகியுள்ளனர். ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே தான் டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்கிறேன். மேலும் என்னை தயவு செய்து அரசியலுக்கு இழுக்காதீர்கள், அவ்வாறு இழுத்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்’ என்றும் பதிவு செய்துள்ளார். அவரது இந்த பதிவு ட்விட்டரில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com