\
விக்ரம் மகனை பாலா இயக்குகிறார்

விக்ரம் மகனை பாலா இயக்குகிறார்

விக்ரம் மகனை பாலா இயக்குகிறார்
Published on

விக்ரம் மகன் துருவை வைத்து இயக்குநர் பாலா ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறார். 

தனது மகன் துருவை வைத்து அர்ஜூன் ரெட்டி தெலுங்குப் படத்தை ரீமேக் செய்ய இருப்பதாக இன்ஸ்ட்ராகிராமில் நடிகர் விக்ரம் சில தினங்கள் முன்பாக அறிவித்திருந்தார். ஆனால் அந்தப் படத்தை யார் இயக்க போகிறார்கள் என்று அவர் கூறவில்லை. விரைவில் அறிவிப்பதாக சொல்லியிருந்தார். இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி படத்தினை பாலா இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியான தெலுங்கு படம் அர்ஜுன் ரெட்டி. சின்ன பட்ஜெட்டில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற படம். அந்தப் படத்தின் ரீமேக்கை உரிமையை வாங்கவும் அதை இயக்கவும் கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் அது பாலாவின் கைக்கு கிடைத்திருக்கிறது.

துருவ் அப்பா விக்ரமை வைத்து பாலா இயக்கிய படம் சேது. அது விக்ரமுக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. தற்போது பாலா அவரது மகனையும் இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com