‘அர்ஜூன் ரெட்டியா இது?’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்

‘அர்ஜூன் ரெட்டியா இது?’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்

‘அர்ஜூன் ரெட்டியா இது?’ - பாலாவை ‘வச்சு’ செய்யும் நெட்டிசன்கள்
Published on

சமூக வலைத்தளத்தில் ‘வர்மா’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடுமையான விமர்சனத்தில் சிக்கியுள்ளது.

தெலுங்கில் 2017 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அர்ஜூன் ரெட்டி’. இதில் நாயகனாக விஜய் தேவரகொண்டா நடித்திருந்தார். செம ரொமான்ஸ் படமான இந்தப் படம் பெரிய சாதனையை படைத்தது. தெலுங்கு சினிமா என்றாலே பேத்தலான கதை, லாஜிக் இல்லாத ஹீரோயிஸம், ராமராஜன் காலத்து கலர் சட்டை என இருந்த இலக்கணத்தை மாற்றி ஒரு நவீன கால ரோமியோ, ஜூலியட் திரைப்படமாக இந்தப் படம் இருந்தது. குறைந்த செலவனான 4 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆஃபீசில் வெற்றி பெற்றது. 

இதனை அடுத்து இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெற போட்டி நிலவியது. இறுதியாக அந்த உரிமையை இயக்குநர் பாலா பெற்றார். தனது மகனை வைத்து பாலா எடுக்க உள்ள திரைப்படம் ‘அர்ஜூன் ரெட்டி’யின் ரீமேக் என இன்ஸ்டாகிராமில் நடிகர் விக்ரம் உறுதி செய்தார். அதன்படி படத்திற்கு ‘வர்மா’ எனத் தலைப்பிடப்பட்டு படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. ஏறக்குறைய படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் படக்குழு படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவியது. 

இந்நிலையில் விக்ரம் மகன் துருவ்வின் பிறந்தநாள் நாளை கொண்டாட உள்ளனர். அதனையொட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தமிழகம் முழுவதும் ஒன்று ஒட்டப்பட்டுள்ளன. அந்தப் போஸ்டரின் புகைப்படம் சமூக வலைத்தளமான ட்விட்டரில் சில எடுத்து பதிவிட்டு வந்தனர். இன்றைய மாடர்ன் உலகில் எல்லா படங்களின் புரமோஷனும் ட்விட்டர் மற்றும் யுடியூப்பில்தான் அரங்கேறி வருகின்றன. அதற்கு மாறாக பாலாவின் ‘வர்மா’ பட போஸ்டர் பழையகால பாணியில் இன்று சுவரிகளில் ஒட்டப்பட்டுள்ளது. நாளை படத்தின் டீசர் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. 

ஆனால் இப்போதைய பிரச்னை அதுவல்ல; வெளியான துருவ்வின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடுமையான விமர்சனத்தை சம்பாதித்துள்ளது. பலரும் தெலுங்கு ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தை ஒப்பீட்டு பாலாவை வச்சு செய்து வருகிறார்கள். அந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா மிக அழகாக இருப்பார். ரொமாண்டிக் ஹீரோவாக வந்த அவர் பின் தாடியும் மீசையுமாக மாறி இருப்பார். ஆனால் ‘வர்மா’வில் துருவ்வின் தோற்றம் ரொமாண்டிக்காக இல்லை. ‘வைதேகி காத்திருந்தால்’ விஜயகாந்த் அளவுக்கு காட்டுத்தனமாக இருக்கிறது. ஆகவே ரசிகர்கள் கொதித்துப் போய் ட்விட்டரில் பாலாவை வருத்தெடுத்து வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com