பிழிந்தெடுத்து விட்டார் இயக்குநர் பாலா: ஜிவி.பிரகாஷ்

பிழிந்தெடுத்து விட்டார் இயக்குநர் பாலா: ஜிவி.பிரகாஷ்

பிழிந்தெடுத்து விட்டார் இயக்குநர் பாலா: ஜிவி.பிரகாஷ்
Published on

இயக்குநர் பாலா தன் மீது பெரும் சுமையை ஏற்றி வைத்து விட்டதாக நடிகர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பாலா இயக்கியுள்ள நாச்சியார் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. பாலா இயக்கத்தில் நடித்தது குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ஜிவி.பிரகாஷ், பாலா சார் இயக்கத்தில் நாச்சியார் படத்தில் நடித்தது சிறந்த அனுபவத்தை கொடுத்துள்ளது. ஓவ்வொரு ஷாட்டிலும் என் மீது பாரத்தை ஏற்றி வைத்து பிழிந்தெடுத்து விட்டார். அவர் எதிர்பார்க்கும் வகையில் காட்சிகள் அமையும் வரை விடமாட்டார்.  அவருடைய இயக்கத்தில் நடித்தது பெரிய பணியாகி விட்டது. ஆனாலும், அவரிடம் இருந்து நடிப்புக்கு தேவையான அனுபவங்களை கற்றுக்கொண்டேன். இது எனது கேரியரில் மிகச்சிறந்த வாய்ப்பு. அதற்காக பாலா சாருக்கு மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com