\
சாதனை பயணத்தில் விஜய்யின் பைரவா

சாதனை பயணத்தில் விஜய்யின் பைரவா

சாதனை பயணத்தில் விஜய்யின் பைரவா
Published on: 

இளையதளபதி விஜய்யின் ‘பைரவா’ ட்ரைலர் வெளிவந்த இரண்டு நாட்களில் 45 லட்சம் பார்வையாளர்களை கடந்த சாதனை படைத்துள்ளது.

இளையதளபதி விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவரவுள்ள திரைப்படம் ‘பைரவா’. இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ட்ரைலர் 2017 புத்தாண்டு விருந்தாக வெளிவந்துள்ளது. இந்நிலையில் வெளிவந்து இரண்டு நாட்கள் கூட முடிவடையாத நிலையில் தற்போது வரை ‘பைரவா’ ட்ரைலரை 45 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். காதல், காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஸன் என அனைத்து அம்சங்களுடனும் வெளிவந்துள்ள ‘பைரவா’ ட்ரைலர் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய புத்தாண்டு பரிசாக அமைந்துள்ளது மேலும் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இனி வரும் காலங்களில் இப்படத்தின் ட்ரைலர் பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரதன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், வில்லனாக ஜெகபதிபாபு, சதீஸ் என ஏராளாமான நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்திருக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com