பாகுபலி முதல், இரண்டாம் பாகங்களில் இணைந்து நடித்தபோது பிரபாஸுடன் ஏற்பட்ட நட்பை தற்போதும் தொடர்ந்து வருகிறார் ராணா.
பாகுபலி ரிலீசுக்குப் பிறகு ராணா நடிப்பில் ’நேனே ராஜு, நேனே மந்திரி’ படம் ரிலீசாக இருக்கிறது. அரசியல் த்ரில்லர் படமான இதில் காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளார். தேஜா இயக்கியுள்ள இப்படம் அடுத்த மாதம் 11ம்தேதி ரிலீஸாக இருக்கிறது. இதற்கான ப்ரமோசன் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார் ராணா. கதை மீதும், படத்தின் மீதும் ராணா நம்பிக்கை வைத்திருந்தாலும், படத்தை ரசிகர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். படம் ரிலிசாகும்போது சிறந்த ஓபனிங் வேண்டும் என்பதில் ராணா கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸ் ’நேனே ராஜு, நேனே மந்திரி’ படத்தின் ப்ரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பாகுபலி படத்தில் ஏற்பட்ட நட்பின் காரணமாக பிரபாஸ் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்ததாக ராணா தரப்பினர் தெரிவித்தனர்.