பாகுபலி 2 திரைப்படம் வெளியானது முதல் தொடங்கி வசூல் சாதனைகளை படைத்துவருகிறது.
பாகுபலி 2 திரைப்படம் 4 நாட்களில் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்துள்ளது. பாகுபலி 1 திரைப்படம் 650 கோடி ரூபாயை வசூலித்த நிலையில், அதன் இரண்டாம் பாகம், வெளியான நான்கு நாட்களிலேயே ஒட்டுமொத்தமாக 600 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. இதற்கு முன்பாக, 2014 ல் அமீர்கானின் பிகே திரைப்படம் 792 கோடி ரூபாய் வசூல் செய்ததே இதுவரை வசூல் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை நோக்கி பாகுபலி 2 திரைப்படம் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. வசூல் சாதனையில் ரஜினிகாந்தின் கபாலி திரைப்படத்தின் 350 கோடி ரூபாய் சாதனையை மிஞ்சி பாகுபலி 2 இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.