மிரட்ட வரும் பாகுபலி-2 ட்ரைலர்

மிரட்ட வரும் பாகுபலி-2 ட்ரைலர்

மிரட்ட வரும் பாகுபலி-2 ட்ரைலர்
Published on

ராஜமவுலி இயக்கத்தில் வெளியாக உள்ள பாகுபலி - 2 படத்தின் ட்ரைலர் வரும் 16ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகுபலி படத்தின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டிருக்கும் பாகுபலி-2 படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் ட்ரைலர் வேலைகளை முடித்துள்ள இயக்குனர் ராஜமவுலி, அதனை வரும் 16ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் உள்ள திரையரங்களில் காலை 9 மணிக்கும், மாலை 5 மணியளவில் இணையதளத்திலும் ட்ரைலர் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா மற்றும் தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாகுபலி 2 படம் வரும் ஏப்ரல் 28ல் வெளியாகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com