\
இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதானாம்!

இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதானாம்!

இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதானாம்!
Published on

இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் என்ற சாதனையை ’பாகுபலி 2’ பட டிரைலர் பெற்றுள்ளது.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் உட்பட பலர் நடித்துள்ள படம், ’பாகுபலி’. இதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் டிரைலர் கடந்த 16-ம் தேதி வெளியானது. இந்தியா முழுவதும் பலத்த வரவேற்பைப் பெற்ற இந்த டிரைலரை, ஆறு நாட்களில் 87.5 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

இதுபற்றி ராஜமவுலி கூறும்போது, ‘எமோஷனல் காட்சிகள், சண்டைக்காட்சிகள், பிரமாண்டமான படமாக்கம் ஆகியவற்றால் இந்த டிரைலர் இவ்வளவு பெரிய ஹிட் ஆகியிருக்கிறது. ஆனால், இந்த இரண்டு நிமிட டிரைலரை, 17 முறை மாற்றி மாற்றி கட் பண்ணி நேர்த்தியாகக் கொண்டு வந்தோம்’ என்று கூறியுள்ளார்.

இந்தப் படம் அடுத்த மாதம் 28-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்தியாவில் மட்டும் 6,500 தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com