ஆறே நாட்களில் சுமார் 800 கோடி ரூபாய் வசூல் செய்து பாகுபலி 2 சாதனை புரிந்துள்ளது.
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உட்பட பலர் நடித்துள்ள படம், ‘பாகுபலி 2’. இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. வெளியான முதல் காட்சியில் இருந்தே இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படம் ஆறே நாட்களில் 792 கோடி ரூபாய் வசூலித்து, சாதனை படைத்திருக்கிறது. அமீர்கான் நடித்த பி.கே. படத்தின் வசூலை முறியடித்து, இந்திய திரைப்படங்களில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை பாகுபலி-2 படைத்திருக்கிறது. இன்னும் அதிக வசூலை எட்டும் என படக்குழு தெரிவித்துள்ளது.