\
பாகுபலி 2 படத்துக்கு தடை கேட்டு வழக்கு

பாகுபலி 2 படத்துக்கு தடை கேட்டு வழக்கு

பாகுபலி 2 படத்துக்கு தடை கேட்டு வழக்கு
Published on

பாகுபலி படத்தின் இரண்டாவது பாகத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா உட்பட பலர் நடித்துள்ள படம், ’பாகுபலி 2’. இந்த மாதம் 28-ம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. தமிழகத்தில் இப்படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்.எஸ்.கிருஷ்ணன் வெளியிடுகிறார். இதற்காக ஏஸ் மீடியா என்ற நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றாராம். இதைத் திரும்ப செலுத்தவில்லை எனக் கூறி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பணத்தை திரும்பிக் கொடுக்காமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் ஏஸ் மீடியா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி கல்யான சுந்தரம் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com