எஸ்.எஸ்.ராஜமெளலி இயத்தில், நடிகர் பிரபாஸ், ரானா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரின் நடிப்பில், சுமார் ரூ.230 கோடி செலவில் எடுக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற பாகுபலி 2 திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே வசூலில் பெரும் சாதனை படைத்தது.
வெளியாகி 15 நாட்களுக்குப் பிறகு சுமார் 1250 கோடி ரூபாய் வசூல் செய்து, இந்திய சினிமா வரலாற்றில் சாதனை படைத்துள்ளது. இதுவரை இந்தியாவில் எடுக்கப்பட்ட படங்களிலேயே 15 நாட்களில் அதிகபட்சமாக வசூல் செய்துள்ளது பாகுபலி 2.
தமிழகத்தில் மட்டும் 15 நாட்களில் சுமார் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூல் ஆகியுள்ளது. மற்ற வெளிநாடுகளில் 100 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.