சினிமா
‘பஹிரா’ டீசர் வெளியீடு - விதவித கெட்டப்புகளில் வித்தியாச பிரபுதேவா!
‘பஹிரா’ டீசர் வெளியீடு - விதவித கெட்டப்புகளில் வித்தியாச பிரபுதேவா!
நடிகர் பிரபுதேவா – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணைந்துள்ள ’பஹிரா’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.
’த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது ‘பஹிரா’ படத்தை இயக்கி முடித்துள்ளார். பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் தற்போது வெளியிட்டு இருக்கிறார். டீசரில் பிரபுதேவாவா இது? என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு இன்னும் இளமையாக விதவித கெட்டப்புகளில் கவனம் ஈர்க்கிறார்.
ஆனால், ’மன்மதன்’ படத்தில் சிம்பு தன்னிடம் பழகும் பெண்களை கொலை செய்யும் காட்சிகளை நினைவு கூரச்செய்து பகிரூட்டுகின்றன ‘பஹிரா’ டீசர் காட்சிகள். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது பாணியை இதிலும் பதித்துள்ளார் என்று கருத்திட்டு வருகிறார்கள் விமர்சகர்கள்