\
மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்... உறுதிப்படுத்திய ஓவியா!

மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்... உறுதிப்படுத்திய ஓவியா!

மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்... உறுதிப்படுத்திய ஓவியா!
Published on

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் பங்கேற்பதை நடிகை ஓவியா உறுதி செய்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் ஓவியா. அவரை மீண்டும் நிகழ்ச்சிக்கு அழைத்து வர அவரிடம் பிக்பாஸ் நிகழ்ச்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதற்கு ஓவியா மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாயின. 
இந்நிலையில் செட்படம்பர் 30ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100வது நாள். இந்த சீசனின் இறுதி நிகழ்ச்சியும் இதுதான். அன்றைய நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாயின. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று ட்விட்டரில் ஓவியா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 
அதில், ‘லைவ் சாட் வேண்டும் என நிறைய பேர் ட்வீட் செய்துள்ளதை பார்க்கிறேன். உங்களை போலவே நானும்  ஒன்றை செய்ய ஆர்வமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். பிக்பாஸ் 100 வது நாள் முடிந்தததும் சாட்  செய்யலாம்’ எனக் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் பிக்பாஸ் இறுதி நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com