\
பாகுபலி-2 படத்தை தொடர்ந்து விவேகம் சாதனை!

பாகுபலி-2 படத்தை தொடர்ந்து விவேகம் சாதனை!

பாகுபலி-2 படத்தை தொடர்ந்து விவேகம் சாதனை!
Published on

அஜீத் நடித்த விவேகம் படத்தின் ஆடியோ வெளியீடு வழக்கமாக இல்லாமல், முதல்முறையாக இணையதளத்தில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. சர்வதேச தரத்துடன் அனிருத் இசையமைப்பில் உருவான விவேகம் படப்பாடல்கள் அஜீத் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

ஆனால், தமிழில் இணையதளத்தில் வெளியானதைப்போல அல்லாமல் தெலுங்கில் விவேகம் பட ஆடியோ வெளியீடு வழக்கம்போல விழாவாக இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் சிவா தயாரிப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

இந்நிலையில் அஜீத் நடித்த படங்களிலேயே அதிக விலைக்கு விவேகம் படம் விற்பனையாகி உள்ளதாக தயாரிப்பாளர் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் 100 கோடி கிளப்பில் அஜீத் இணைத்துள்ளார். 120 கோடி ரூபாய்க்கு விவேகம் படம் வியாபாரமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்நிலையில் அதிக வியாபாரம் செய்யப்பட்ட படமாக இந்தாண்டு வெளியான பாகுபலி-2 படத்திற்கு அடுத்த இடத்தைப்பிடித்து  விவேகம் சாதனை படைத்துள்ளது.  

சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'விவேகம்' படத்தில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்தப்படம் வரும் 24ம் தேதி ரிலீசாக உள்ளது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com