’பாகுபலி-2’ திரைப்படம் ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்டு அங்கு நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் உட்பட பலர் நடித்த படம், ‘பாகுபலி’. இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து இதன் அடுத்தப் பாகமும் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது. ஏப்ரல் 2017-ல் வெளியான ’பாகுபலி 2’ படம், உலகம் முழுவதும் மொத்தம் ரூ.1700 கோடி வசூலித்துள்ளது.
இந்தப் படம், ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் அங்கு வெளியானது. அங்கு பெரிய அளவில் கவனம் ஈர்க்காத இந்தப் படம், இப்போது ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்டு நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது. ரஷ்யாவிலும் வசூலில் சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.