\
தொடங்கியது ஜி.வி.யின் ஐங்கரன்!

தொடங்கியது ஜி.வி.யின் ஐங்கரன்!

தொடங்கியது ஜி.வி.யின் ஐங்கரன்!
Published on

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ’ஐங்கரன்’படப்பிடிப்பு இன்று தொடங்கியது. ’ஈட்டி’ பட இயக்குனர் ரவியரசு இப்படத்தை இயக்குகிறார்.

ஜிவி நடிப்பில் உருவாகி இருக்கும் ’அடங்காதே’ படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் அன்வர், காளி என்கிற பெயரில் இரண்டு விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார். படத்தில் அரசியல் வாதியாக சரத்குமார் வருகிறார். இதனால் ’அடங்காதே’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து ’ஈட்டி’ பட இயக்குனர் ரவியரசுடன் கைகோர்த்துள்ளார் ஜி.வி. இப்படத்தை காமன் மேன் பி.கணேஷ் தயாரிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ளது. இத்தகவலை ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com