\
ரிலீஸ் ஆகும் முன்பே தமிழ் ராக்கர்ஸில் வெளியான ’அவெஞ்சர்ஸ்’!

ரிலீஸ் ஆகும் முன்பே தமிழ் ராக்கர்ஸில் வெளியான ’அவெஞ்சர்ஸ்’!

ரிலீஸ் ஆகும் முன்பே தமிழ் ராக்கர்ஸில் வெளியான ’அவெஞ்சர்ஸ்’!
Published on

திரையரங்கில் நாளை ரிலீஸ் ஆக உள்ள நிலையில், ’அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ என்ற ஹாலிவுட் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையளத்தில் நேற்றே ரிலீஸ் ஆகியுள்ளது.

’அவெஞ்சர்ஸ்’ பட வரிசையில் இப்போது உருவாகியுள்ள படம், ’அவஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ (Avengers: Endgame). ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்க் ருபலோ, கிறிஸ் எவான்ஸ் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ருசோ சகோதரர்களான, அந்தோனி ருசோ, ஜோ ருசோ இயக்கியுள்ளனர்.  இந்தியாவில் இந்தப் படம், ஆங்கிலத்துடன் இந்தி, தெலுங்கு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. இதில் தமிழ்ப் பதிப்புக்கான வசனத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ளார்.

 இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒரு பாடலை உருவாக்கியுள்ளார். இந்த பாடல் ஏப்ரல் 1 ஆம் வெளியானது. நடிகர் விஜய் சேதுபதி அயர்ன்மேனுக்கும் ஆண்ட்ரியா, பிளாக் விடொவ் கேரக்டருக்கும் தமிழ் டப்பிங் பேசியுள்ளனர். 

உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் நாளை வெளியாக உள்ள நிலையில், இதன் ஆங்கிலப் பதிப்பு தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் நேற்றே வெளியாகியுள்ளது. வழக்கமாக தமிழ்ப் படங்கள மட்டுமே திருட்டுத்தனமாகப் பதிவேற்றி வந்த தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், இப்போது ஹாலிவுட் படத்தையும் பதிவேற்றி இருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com