\
’அவதார்’ சாதனையை முறியடித்தது ’அவெஞ்சர்ஸ்’!

’அவதார்’ சாதனையை முறியடித்தது ’அவெஞ்சர்ஸ்’!

’அவதார்’ சாதனையை முறியடித்தது ’அவெஞ்சர்ஸ்’!
Published on

’அவதார்’ படத்தின் வசூல் சாதனையை, ’அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படம் முறியடித்து சாதனை படைத்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி, வெளியான ஹாலிவுட் படம், ’அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’. உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்த இந்தப் படம், வெறும் 11 நாள்களில், 21 ஆண்டுகளாக, இரண்டாம் இடத்தில் இருந்து வந்த ’டைட்டானிக்’ படத்தின் வசூலை முறியடித்தது. அதற்காக அந்தப் படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனும் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, அவர் இயக்கிய ’அவதார்’ படத்தின் வசூலை தாண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் ’அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்தின் வசூல் குறைந்து கொண்டே வந்ததால், வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில் அந்தப் படம் மீண்டும் ரீ-ரிலிஸ் ஆனது. 

’அவதார்’ திரைப்படம் 2.788 பில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.19,210 கோடி) வசூல் செய்து முதலிடத்தில் இருக்கிறது. ’அவெஞ்சர்ஸ்’ மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டால் ’அவதார்’ வசூலை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, இப்போது ’அவதார்’ சாதனையை அவெஞ்சர்ஸ் முறியடித்துள்ளது. இதை ’அவெஞ்சர்ஸ்’ தயாரிப்பாளர் கெவின் பீஜ் தெரி வித்துள்ளார்.

டிஸ்னி ஸ்டூடியோஸ் துணை தலைவர் ஆலன் ஹார்ன், ‘மார்வல் ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கு வாழ்த்துக்கள். இந்தப் படத்தை மாபெரும் வசூல் சாதனை படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com