‘அவதார் 2’ திரைப்படத்தின் ட்ரெய்லர் எப்போது? - வெளியான தகவல்

‘அவதார் 2’ திரைப்படத்தின் ட்ரெய்லர் எப்போது? - வெளியான தகவல்
‘அவதார் 2’ திரைப்படத்தின் ட்ரெய்லர் எப்போது? - வெளியான தகவல்

ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார் 2’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வருகிற மே 6-ம் தேதி, மார்வல் ஸ்டூடியோஸின் ‘டாக்டர் ஸ்ட்ரேன்ஜ் இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ்’ படத்துடன் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

‘தி டெர்மினேட்டர்’, ‘ஏலியன்ஸ்’, ‘டைட்டானிக்’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குநரான ஜேம்ஸ் காமரூன் இயக்கத்தில், கடந்த 2009-ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியானப் படம் ‘அவதார்’. வரலாற்று சயின்ஸ் பிக்ஷனாக உருவான இந்தப் படம், சினிமா உலகை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றது மட்டுமல்லாமல், வசூல்ரீதியாக சாதனை படைத்தது.

இதையடுத்து இந்தப் படத்தின் சீக்குவல் எனப்படும், அடுத்தடுத்த பாகங்கள், குறிப்பிட்ட இடைவெளியில் வெளியாகும் என்று இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கூறியிருந்தார். அத்துடன், ‘அவதார் 2’ படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கியநிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, மே 6-ம் தேதி ‘அவதார் 2’ படத்தின் ட்ரெய்லர், மார்வல் ஸ்டூடியோஸின் ‘டாக்டர் ஸ்ட்ரேன்ஜ் இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ்’ படத்துடன் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘டாக்டர் ஸ்ட்ரேன்ஜ்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக, ‘டாக்டர் ஸ்ட்ரேன்ஜ் இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ்’ திரைப்படம் மே 6-ம் தேதி வெளியாகவுள்ளது. சூப்பர் ஹீரோ படமான இந்தப் படத்தை சாம் ரைமி இயக்கியுள்ளார்.

இதையடுத்து முதல்முறையாக ‘அவதார் 2’ படத்தின் ட்ரெய்லரும், ‘டாக்டர் ஸ்ட்ரேன்ஜ் இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ்’ படமும் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ‘அவதார் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளநிலையில், ‘அவதார் 3’ மற்றும் ‘அவதார் 4’ படத்திற்கான படப்பிடிப்புகளில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ‘அவதார் 2’ திரைப்படம் டிசம்பர் மாதம் 16-ம் தேதி வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com