’ஒரு மாற்றம்’... அவதார் 2 படம் குறித்து பேசிய ஜேம்ஸ் கேமரூன்..!

’ஒரு மாற்றம்’... அவதார் 2 படம் குறித்து பேசிய ஜேம்ஸ் கேமரூன்..!
’ஒரு மாற்றம்’... அவதார் 2 படம் குறித்து பேசிய ஜேம்ஸ் கேமரூன்..!

அவதார்- 2 பட ஷூட்டிங் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்று உறுதிபடுத்தியிருக்கிறார் ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.

கடந்த, 2009 ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தின் 1500 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில் உருவான  ‘அவதார்’ படம்  ‘டைட்டானிக்’ படத்தின் வசூல் சாதனையையே ஓவர் டேக் செய்தது. மேலும், இந்த படத்தில் மூன்று ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. மாபெரும், வெற்றியை குவித்ததால் அவதார்- 2 படத்தை இயக்க முடிவு செய்த இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கடந்த 2016 ஆம் ஆண்டு அவதார் படம் ஐந்து பாகங்களாக தொடரும் எனவும் இரண்டாம் பாகத்தின் வெளியீடு இந்த வருடம் இருக்கும் எனவும் அறிவித்திருந்தார்.

அவரின்  32 ஆண்டுகால திரைவாழ்க்கையில் 9 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார். அதில், டைட்டானிக் உலகின் காதல் படங்களில் சிறந்தப் படமாக போற்றப்படுகிறது. அதுவும், ஆஸ்கர் விருதுகளை குவித்தபடம்தான்.

வரும், 2021 டிசம்பர்-17 அவதார் 2 வெளியிட திட்டமிட்டிருந்த நேரத்தில்  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2022 டிசம்பர்-16 ந்தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார். டைட்டானிக் வெளியாகி 12 ஆண்டுகள் கழித்துதான் அவதார் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஜேம்ஸ் கேமரூனின் படத்திற்காக ரசிகர்கள் காத்திருப்பார்கள். இப்படத்தை தயாரிக்கும் நிறுவனமான வால் டிஸ்னி மற்றப்படங்கள் தயாரிப்பதையும் ஒத்திவைத்துள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com