\
மதுவால் மரணமடைந்த ஸ்ரீதேவி: துபாய் போலீஸ் தகவல்

மதுவால் மரணமடைந்த ஸ்ரீதேவி: துபாய் போலீஸ் தகவல்

மதுவால் மரணமடைந்த ஸ்ரீதேவி: துபாய் போலீஸ் தகவல்
Published on

நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக துபாய் காவல் துறையினர் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர். 

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி எதிர்பாராத விதமாக மரணமடைந்துள்ளார். முதலில் மாரடைப்புக் காரணமாக ஸ்ரீதேவி உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியானது. மயங்கிய நிலையில் நீர் நிரம்பிய குளியல் தொட்டியில் அவர் கிடந்தார் என கூறப்பட்டது. இதனையடுத்து துபாய் போலீசார் தரப்பில் பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். அதேபோல், அந்நாட்டு போலீசாரும் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், ஸ்ரீதேவியின் உடலைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி மரணம் ஒரு விபத்து என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “குளியல் அறை தொட்டியில் ஸ்ரீதேவி தவறி விழுந்துள்ளார். அதிக அளவு ஆல்கஹால் உட்கொண்டு இருந்ததால் அவரால் தண்ணீரில் இருந்து எழ முடியவில்லை. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார். இது ஒரு விபத்துதான்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com