\
’தனுஷ்’  நடித்துவரும் ’அட்ராங்கி ரே’ பட இயக்குநர் ஆனந்த் எல் ராய்க்கு கொரோனா!

’தனுஷ்’ நடித்துவரும் ’அட்ராங்கி ரே’ பட இயக்குநர் ஆனந்த் எல் ராய்க்கு கொரோனா!

’தனுஷ்’ நடித்துவரும் ’அட்ராங்கி ரே’ பட இயக்குநர் ஆனந்த் எல் ராய்க்கு கொரோனா!
Published on

தனுஷின் மூன்றாவது பாலிவுட் படமான அட்ராங்கி ரே படத்தின் இயக்குநர் ஆனந்த் எல் ராய்க்கு கொரோனா தொற்ரு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஆனந்த் எல் ராய்.

இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான  ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் தனுஷ் முதன் முதலில் பாலிவுட்டில்  அறிமுகமானார்.  அதற்கடுத்ததாக, அமிதாப் பச்சன், அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் வெளியான ‘ஷமிதாப்’ படத்தில் வாய்பேசாத கலைஞனாக அசத்தினார். தற்போது, மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கும் அட்ராங்கி ரே படத்தில் அக்‌ஷய் குமார், சாரா அலிகானுடன் தனுஷும் நடிக்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புகள் டெல்லியில் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், ஆனந்த் எல்.ராய் தனக்கு கொரோனா தொற்று என்பதை “இன்று எனக்கு கொரோனா சோதனை செய்ததில் பாசிட்டிவ் என்று வந்துள்ளது. தற்போது மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி தனிமைப்படுத்திக்கொண்டேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் சோதனை மேற்கொள்ளவும்” என்று அக்கறையுடன் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com