\
ஓடிடியில் வெளியாகும் அட்லி தயாரித்துள்ள படம்: எப்போது தெரியுமா?

ஓடிடியில் வெளியாகும் அட்லி தயாரித்துள்ள படம்: எப்போது தெரியுமா?

ஓடிடியில் வெளியாகும் அட்லி தயாரித்துள்ள படம்: எப்போது தெரியுமா?
Published on: 

இயக்குநர் அட்லி தயாரித்துள்ள ’அந்தகாரம்’ படம் வரும் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது என்று அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் விக்னராஜன் இயக்கியுள்ள ’அந்தகாரம்’ படத்தில் ஹீரோவாக அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். ’கைதி’ படத்தில் கஞ்சாவுக்காக சண்டையிடும் அதே மிரட்டல் அர்ஜூன் தாஸ்தான். இவர், விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். ஆர்.ஜேவான அர்ஜுன் தாஸ் குரலுக்கு ரசிகர்கள் கூட்டமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ’சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார் அட்லி. இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்தகாரம் படத்தை தயாரித்துள்ளார்.

இப்படம், தமிழ், தெலுங்கு என நெட் ஃபிளிக்ஸில் வரும் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது. இதுகுறித்து அட்லி ட்விட்டரில் தேதியை அறிவித்து ‘இந்தப் படம் ஏற்கனவே பலரால் பாராட்டப்பட்டது. இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களைச் சென்றடையும். நெட் ஃபிளிக்ஸ் மொழியை பொருட்படுத்தாமல் கதைகளில் ஆர்வம் கொண்டவர்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com