அடுத்ததாக எந்த ஹீரோவை இயக்க இருக்கிறேன் என்பது குறித்து அட்லி மெளனம் கலைத்திருக்கிறார்.
‘மெர்சல்’ ப்ளாக்பாஸ்டர் ஹிட்டிற்கு பிறகு அட்லி அடுத்து யாரை இயக்கப் போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. அவர் மீண்டும் விஜய்யை இயக்குவார் என செய்தி பரவியது. ஆனால் விஜய் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் அட்லி தெலுங்கில் அறிமுகமாக இருப்பதாகக் கூறப்பட்டது. பிரபாஸை ஹீரோவாக வைத்து இயக்க இருக்கிறார் என்றும் அந்தக் கதைக்குத் தேவை ஏற்பட்டால் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் அப்படம் எடுக்கப்படலாம் என்றும் செய்தி அடிப்பட்டது.
இதனிடையே ஒரு விழாவில் பங்கேற்ற அட்லி, “அடுத்தும் நான் தமிழில்தான் படம் இயக்க உள்ளேன். ஆனால் ஹீரோ யார் என்பது சர்ப்ரைஸ்” என்றவர் தெலுங்கில் நான் படம் இயக்க உள்ளதாக வரும் தகவல் உண்மை இல்லை என மறுத்தார். இதனால் சில நாட்களாக நிலவி வந்த வதந்திக்கு இயக்குநர் அட்லி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.