\
செப்டம்பர்: புனேயில் தொடங்கும் அட்லீ - ஷாருக்கான் படப்பிடிப்பு

செப்டம்பர்: புனேயில் தொடங்கும் அட்லீ - ஷாருக்கான் படப்பிடிப்பு

செப்டம்பர்: புனேயில் தொடங்கும் அட்லீ - ஷாருக்கான் படப்பிடிப்பு
Published on

ஷாருக்கான் - அட்லீ இணையும் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் புனேயில் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘பிகில்’ வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அட்லீ பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தியுள்ளார். பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படத்தை இயக்கும் அட்லீ கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா, ‘தங்கல்’ புகழ் சான்யா மல்ஹோத்ரா நடிக்கிறார்கள்.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com