ஷாருக்கான், ஜவான்
ஷாருக்கான், ஜவான்ட்விட்டர்

2.15 நிமிடங்கள்.. அட்லீ - ஷாருக்கானின் ‘ஜவான்’ பட ட்ரெய்லர் குறித்து வெளியான தகவல்

அட்லீ-ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்தின் ட்ரெய்லருக்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
Published on

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில், இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜவான்’. இந்தப் படத்தில், நயன்தாரா, ப்ரியாமணி, வில்லனாக விஜய் சேதுபதி, யோகிபாபு, சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர் உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. கௌரவ வேடத்தில் தீபிகா படுகோனே, சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர்.

Jawan poster
Jawan posterTwitter

அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை, ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கௌரிகான் ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் எண்டெர்டெயிண்மெண்ட் தயாரித்து வருகிறது. கடந்த ஜூன் 2-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக வேண்டிய இப்படம், வி.எஃப்.எக்ஸ் பணிகள் காரணமாக வரும் செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது படக்குழுவினரையும் மீறி கசிந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து வருகின்றனர். இந்நிலையில், ‘ஜவான்’ படத்திற்கான ட்ரெய்லருக்கு தணிக்கை சான்றிதழ் இன்று அளிக்கப்பட்டுள்ளது. ட்ரெய்லருக்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ள நிலையில், 2.15 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில், ட்ரிம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ஷாருக்கானின் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். ட்ரெய்லர் வருகிற 12 ஆம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com