வில்லென மடங்கும் உடல்: அதுல்யா ரவியின் பிட்னஸ் வீடியோ

வில்லென மடங்கும் உடல்: அதுல்யா ரவியின் பிட்னஸ் வீடியோ

வில்லென மடங்கும் உடல்: அதுல்யா ரவியின் பிட்னஸ் வீடியோ
Published on

நடிகை அதுல்யா ரவியின் சுவையான பதிவுகளுக்கும் சுவாரசியமான காணொலிகளுக்கும் சமூக வலைதளங்களில் பெரும் ரசிகர் கூட்டமே காத்திருக்கிறது. குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய 'கேப்மாரி' படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி திரையுலகில் புகழ்பெற்றார்.

சமூக வலைதளங்களில் கலகலப்பூட்டும் படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தும் அதுல்யாவின் லேட்டஸ்ட் பிட்னஸ் வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதற்கு பிலீவ் என்று தலைப்பிட்டுள்ளார். பயிற்சியாளரின் உதவியுடன் உடலை வில்லென மடக்கி கையை ஊன்றி தலைகீழாக நிற்கிறார்.

ரொம்பவும் சிரமமான உடற்பயிற்சியை அதுல்யா ரவி ஈஸியாக செய்திருக்கிறார். சில நொடிகளே ஓடும் அந்த காட்சி காண்போரை வியக்கவைப்பதாக உள்ளது. இந்த பிட்னஸ் வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

அதுல்யா ரவியின் அடுத்த படம் என் பெயர் ஆனந்தன். தற்போது சாந்தணுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com