தற்கொலையில் இருந்து என்னை மீட்டது... கஸ்தூரி உருக்கம்!

தற்கொலையில் இருந்து என்னை மீட்டது... கஸ்தூரி உருக்கம்!

தற்கொலையில் இருந்து என்னை மீட்டது... கஸ்தூரி உருக்கம்!
Published on

தற்கொலை எண்ணத்தில் இருந்து என்னை மீட்டது, நெட்டிசன்கள்தான் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில், 90-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் கஸ்தூரி. தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்துள் ள அவர், திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். இப்போது மீண்டும் நடித்து வருகிறார். சமீபத்தில் திரைக்கு வந்த 'தமிழ் படம் 2'ல் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். 

சமூக, அரசியல் வி‌ஷயங்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில், காஞ்சிபுரம் சிலை மோச டி விவகாரம் குறித்து கருத்து பதிவிட்டிருந்தார். அதில் அரசு துறைகள் என்றாலே லஞ்சம், மோசடி திருட்டு என்பது வாடிக்கையாகி விட்டது எனக் குறிப்பிட்டிருந்தார். 

இதையடுத்து ஒரு ரசிகர், ’நீங்கள் நடித்து வாங்கிய ஊதியத்துக்கு உரிய வருமான வரி செலுத்தியிருக்கீங்களா?’ என கேள்வி எழுப்பியிருந்தார். 

அதற்கு பதிலளித்த கஸ்தூரி, 'நான் வரி ஏய்ச்சதில்லை, என்னை பலர் காசு விஷயத்துல ஏய்ச்சிருக்காங்க! பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுக்கிட்டதுதான் அதிகம்’ என்று கூறியிருந்தார். இது சினிமாவில் பரபரப்பானது.

இந்நிலையில் தான் தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவித்துள்ளார் கஸ்தூரி. இது தொடர்பாக ட்விட்டரில் அவர், ‘ஒரு காலத்தில் நான் கடுமையாக போராடிக் கொண்டிருந்தேன். பலவற்றை இழந்தேன். உறவினர்கள் என்னை ஏமாற்றினார்கள். சிலர் நம்பிக்கை துரோகம் செய்த னர். வாழ்க்கை என்னை சோதித்தது. மரணம் என்னைத் தூண்டியது. ஆனால் என் நண்பர்கள் எனக்கு துணை நின்றனர். நீங்கள் (நண்பர்கள்) எனக்காக செய்த விஷயங்களை ஒருபோதும் மறக்க மாட்டேன். கடந்த 2 வருடங்களுக்கு முன் என் வாழ்க்கை சிதைந்திருந்தது. கடுமையான மன அழுத்தத்திலும் தற்கொலை உணர்விலும் இருந்தேன். நெட்டிசன்ஸ்களாகிய நீங்கள்தான் என்னை அந்த உணர்விலிருந்து மீட்டு வந்தீர்கள். உங்களுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com