\
கருப்பு வெள்ளை காலத்தில் ‘அசுரன்’ தனுஷ்

கருப்பு வெள்ளை காலத்தில் ‘அசுரன்’ தனுஷ்

கருப்பு வெள்ளை காலத்தில் ‘அசுரன்’ தனுஷ்
Published on

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கும் ‘அசுரன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ள நிலையில் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் தனது திரையுலகை‘பொல்லாதவன்’ திரைப்படம் மூலம் தொடங்கினார். அத்திரைப்படத்துக்கு நடிகர் தனுஷ் சரியான தேர்வாக இருந்தார். அதற்குப்  பிறகு‘ஆடுகளம்’ படத்தை தனுஷை வைத்து இயக்கினார் வெற்றிமாறன். கிராமத்து பின்னணியில் உருவான அத்திரைப்படம் 6 தேசிய விருதைகளை வாங்கியது. அதற்குப் பிறகு தனுஷுடன் வெற்றிமாறன் இணைந்த திரைப்படம் ‘வடசென்னை’. ஒரு இளைஞன் எப்படி கேங்ஸ்ட்ராக உருவாகிறான் என்ற பின்னணியில் இந்தத் திரைப்படம் உருவானது. 

‘வட சென்னை’ ஆடியோ விழாவில் பேசிய தனுஷ், வடசென்னையை மூன்று பாகமாக எடுக்க உள்ளோம். ஆனால் அதற்கு முன்னதாக நானும் வெற்றிமாறனும் இணைந்து வேறு ஒரு படம் எடுக்க இருக்கிறோம் என்று தெரிவித்து இருந்தார். பிறகு ‘அசுரன்’ என்ற தலைப்பையும் தனுஷ் வெளியிட்டார். 

அதன்படி அசுரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க உள்ளது. இதனையடுத்து இரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. ஒரு போஸ்டரில் கையில் ஈட்டியுடன் தனுஷ் தாவிக்குதிப்பது  போலவும், மற்றொரு போஸ்டரில் மஞ்சு வாரியரும், தனுஷும் ஜோடியாக புகைப்படம் எடுத்துக்கொள்வது போலவும் போஸ்டர் அமைந்துள்ளது.

வெற்றிமாறன், தனுஷ் இருவரின் கூட்டணியில் ஏற்கெனவே உருவான மூன்று படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ‘அசுரன்’ திரைப்படமும் புதிய கதைக்களத்துடன் வரும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து உள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com