சிம்புவின் ‘பத்து தல’ படத்தில் இணைந்த டீஜே!

சிம்புவின் ‘பத்து தல’ படத்தில் இணைந்த டீஜே!
சிம்புவின் ‘பத்து தல’ படத்தில் இணைந்த டீஜே!

சிம்புவின் ‘பத்து தல’ படத்தில் நடிகர் டீஜே இணைந்துள்ளார். நேற்று அவரின் பிறந்தநாளையொட்டி அதிகாரபூர்வமாக படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த 2017 ம் ஆண்டு கன்னடத்தில் சிவ ராஜ்குமார், ஸ்ரீ முரளி நடிப்பில் வெளியானமஃப்டிபடம் சூப்பர் ஹிட் அடித்து வசூல் சாதனையும் செய்தது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ள ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா, சிவ ராஜ்குமார் கேரக்டரில் சிம்புவும், ஸ்ரீ முரளியாக கெளதம் கார்த்திக்கையும் நடிக்க ஒப்பந்தம் செய்ய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு இந்தப் படத்தின் ஷூட்டிங்கும் சில நாட்கள் நடந்த நிலையில், சிம்புவின் கால்ஷீட் பிரச்சனையால் படம் பாதியிலேயே நின்றது. இந்நிலையில், சிம்பு உடலைக் குறைத்து ஈஸ்வரன், மாநாடு படங்களில் சரியான நேரத்திற்கு வந்து ஒத்துழைப்புக் கொடுப்பதால் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு தயாராகிவிட்டது. இப்படத்தை, சில்லுனு ஒருகாதல் இயக்குநர் கிருஷ்ணா இயக்குகிறார். பிரியா பவானிசங்கர் தாசில்தாராக நடிக்கிறார்.

இந்நிலையில், நேற்று டீஜேவின் பிறந்தநாளையொட்டி ‘பத்து தல’ படத்தில் இணைந்துள்ளதை படக்குழு அறிவித்துள்ளது. தான் இணைந்துள்ளதை டிஜேவும் உறுதி செய்துள்ளார். அதேபோல, கவிஞர் மனுஷ்யபுத்ரனும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, உலகம் முழுக்க பிரபல பாடகராக அறியப்படும் டீஜே கடந்த ஆண்டு வெளியாகி வசூல் சாதனை செய்த ’அசுரன்’ படத்தில் தனுஷின் மூத்த மகனாக நடித்து கவனம் ஈர்த்திருந்தார். இந்நிலையில், சிம்புவுடன் இணைந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com