இயக்குநராக அறிமுகமாகும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் இணை இயக்குநர்

இயக்குநராக அறிமுகமாகும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் இணை இயக்குநர்
இயக்குநராக அறிமுகமாகும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் இணை இயக்குநர்

இயக்குநர் பா.ரஞ்சித் தன்னுடன் இணை இயக்குராக பணியாற்றிய தினகரன் சிவ லிங்கம் என்பவரை இயக்குராக அறிமுகம் செய்துள்ளார். 

தமிழ் சினிமாவில் தன்னுடைய உதவியாளர்களை இயக்குநராக்கும் முயற்சியில் பா.ரஞ்சித் உள்ளார். அதன்படி சில படங்களையும் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய கபாலி, காலா படங்களில் இணை இயக்குராக பணியாற்றிய தினகரன் சிவலிங்கம் என்பவரை தன்னுடைய நீலம் புரொடக்ஷன்ஸ் படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் இயக்குராக்குகிறார். அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் முதல்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

அதில் தற்போதைய சமூக பிரச்னைகளை நகைச்சுவை பாணியில் உருவாக்குகின்றனர். மேலும் அந்தப் படத்தில் முன்னணி நடிகர்கள் நடிப்பார்கள் என கூறியுள்ளனர். மேலும் இந்தப் படத்தை பா.ரஞ்சித்துடன் நடிகர் போஸ்டர் நந்தகுமாரின் மகன் அருண் பாலாஜியும் இணைந்து தயாரிக்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com