“உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் மிரட்டுகிறார்; நடவடிக்கை எடுங்கள்”- நடிகர் தாடி பாலாஜி புகார்

“உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் மிரட்டுகிறார்; நடவடிக்கை எடுங்கள்”- நடிகர் தாடி பாலாஜி புகார்

“உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் மிரட்டுகிறார்; நடவடிக்கை எடுங்கள்”- நடிகர் தாடி பாலாஜி புகார்
Published on

உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகர் தாடி பாலாஜி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

தன்னையும் தனது மனைவி நித்தியாவையும் காவல் உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் என்பவர் திட்டமிட்டு பிரித்து வருவதாக, நடிகர் தாடி பாலாஜி கடந்த ஆண்டு காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஆகஸ்ட் 13ம் தேதி உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் மற்றும் நடிகர் தாடி பாலாஜி ஆகிய இருவரும் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் அதிவீரபாண்டியன் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகினர்.


விசாரணையின்போது உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் தன்னை நாக்கை துருத்தியும், விரலைக்காட்டி மிரட்டியதாகவும் அப்போதே அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து உதவி ஆய்வாளரின் இந்த செய்கைக்கு நடவடிக்கை எடுக்கும்படி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடிகர் தாடி பாலாஜி புகார் அளித்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி உதவி ஆய்வாளர் மனோஜ்குமார், தன்னை மிரட்டுவதாகவும் துணை ஆணையர் விசாரணையின் போதே தன்னை விரலைக் காட்டியும், நாக்கை துருத்தியும் மிரட்டியதாகவும் கூறினார். மேலும் அனைத்து குற்றச்சாட்டும் போதிய ஆதாரங்களை காவல் ஆணையரிடம் சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com