\
இணையத்தில் வைரலாகும் அசின் மகளின் பிறந்த நாள் புகைப்படங்கள்!

இணையத்தில் வைரலாகும் அசின் மகளின் பிறந்த நாள் புகைப்படங்கள்!

இணையத்தில் வைரலாகும் அசின் மகளின் பிறந்த நாள் புகைப்படங்கள்!
Published on: 

நடிகை அசின் மகளின் முதல் பிறந்த நாள் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் உள்ளம் கேட்குமே, எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, கஜினி, மஜா, சிவகாசி, காவலன் உட்பட பல படங்களில் நடித்தவர் அசின். விஜய், அஜீத், சூர்யா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்த இவர், ‘கஜினி’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்தார்.

 ஆமிர்கானுடன் இந்த படத்தில் நடித்த அசினுக்கு இந்தி வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தன. சல்மான் கான், அக்‌ஷய்குமார், அபிஷேக் பச்சன் உட்பட முன்னணி இந்தி ஹீரோக்களுடன் அங்கும் நடித்து வந்தார்.

(அசின் மகளுடன் அக்‌ஷய்குமார்)

அக்‌ஷய் குமாருடன் ஹவுஸ்புல் 2 படத்தில் நடித்த போது, அக்‌ஷயின் நண்பரும் மைக்ரோமேக்ஸ் நிறுவனருமான ராகுல் ஷர்மாவுடன் அசினுக்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு காதலாக மாறியது. இதையடுத்து இவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி.19ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பின் அசின் நடிப்பதை நிறுத்திவிட்டார். 

கடந்த 2017, ஆண்டு அக்டோபர் 24ம் தேதி அசினுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. நடிகை அசினின் பிறந்தாள் அக்டோபர் 26. அவரது பிறந்த நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன் மகள் பிறந்தது குறித்து மகிழ்ச்சித் தெரிவித்திருந்தார் அசின்.

மகள் பிறந்தது பற்றி தெரிவித்த ராகுல் ஷர்மா, “தேவதை போன்று குழந்தை பிறந்திருக்கிறாள். இதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. கடந்த 9 மாதங்களும் எங்களுக்கு மிகவும் சிறப்பானது. மேலும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும் எங்களுக்குள் இருந்தன. எங்கள் மீது அளவில்லா அன்பு காட்டி வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குழந்தைக்கு அரின் என்று பெயரிட்டிருந்தனர். இந்தக் குழந்தைக்கு நேற்று முதலாவது பிறந்த நாள். இதை சிறப்பாகக் கொண்டாடிய அசின் தம்பதியினர், குழந்தையின் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் முதன் முறையாக வெளியிட்டுள்ளனர். இது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com