”இணைய தாக்குதலால் என்னையே கொல்லத் துணிந்தேன்” - ஹாலிவுட் நடிகை ட்வீட்!

”இணைய தாக்குதலால் என்னையே கொல்லத் துணிந்தேன்” - ஹாலிவுட் நடிகை ட்வீட்!
”இணைய தாக்குதலால் என்னையே கொல்லத் துணிந்தேன்” - ஹாலிவுட் நடிகை ட்வீட்!

ஆசிய அமெரிக்க நடிகையான கான்ஸ்டன்ஸ் வூ, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், சமூக ஊடகங்களில் நிகழ்ந்த கசப்பான பின்னடைவால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது திரைத்துறையில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

40 வயதான வூ, 2019 ஆம் ஆண்டில் அவர் நடித்திருந்த "Fresh Off the Boat" என்ற சிட்காம் பற்றி ட்விட்டரில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக அப்போது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.

ஆன்லைன் தளத்தில் இணையவாசிகள் பலர் தன்னை அவமானப்படுத்தியதோடு, மற்றொரு ஆசிய அமெரிக்க நடிகையும் தன்னை பற்றி விமர்சித்ததால் வூ தனது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவுவெடுத்தாகவும், அதனையடுத்து நல்வாய்ப்பாக நண்பர் ஒருவர் என்னை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தனது ட்விட்டரில் ஒரு அறிக்கையாகவே வூ வெளியிட்டுள்ளார். அதில், “இனி வாழத் தகுதியற்றவள் என்று நான் உணர ஆரம்பித்தேன். நான் ஆசிய அமெரிக்க பிரபலங்களுக்கான AsAms-க்கு அவமானமாக இருந்தேன், நான் இல்லாமல் அவர்கள் நன்றாக இருப்பார்கள்" என்று எண்ணினேன். அதனால் அப்படி ஒரு முடிவெடுத்தேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிறகு, சமூக வலைதளங்களில் இருந்து விலகி, தனது மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த எண்ணியதாகவும், ஆனால், ஆசிய அமெரிக்கர்களிடையே மனநலம் பற்றிய ஒரு பரந்த விவாதத்தைத் தொடங்குவதற்காக, ஆன்லைன் தளங்களுக்குத் திரும்பவும், தனது கதையைப் பகிர்ந்து கொள்ளவும் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துளார்.

இதுபோல, AsAms-களின் மன ஆரோக்கியத்தைப் பற்றி போதுமான அளவு பேசப்படுவதில்லை எனக் குறிப்பிட்டுள்ள வூ, வெற்றியடைவது குறித்து கொண்டாடப்படும் வேளையில், அதற்காக AsAms-கள் சமூகத்தில் மிகவும் சங்கடமான சிக்கல்களைத் தவிர்ப்பதும் நிறைய உள்ளது என்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com