புதிய பரிணாமத்தில் அசோக் செல்வன்.. ரசிகர்களை கவரும் ’வேழம்’ பட ட்ரெய்லர்!

புதிய பரிணாமத்தில் அசோக் செல்வன்.. ரசிகர்களை கவரும் ’வேழம்’ பட ட்ரெய்லர்!

புதிய பரிணாமத்தில் அசோக் செல்வன்.. ரசிகர்களை கவரும் ’வேழம்’ பட ட்ரெய்லர்!
Published on

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள வேழம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஹீரோக்களில் ஒருவர் அசோக் செல்வன். இவரது நடிப்பில் வந்த தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன், ஓ மை கடவுளே, ஹாஸ்டல், மன்மதலீலை ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

இந்த நிலையில் அறிமுக இயக்குநர் சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் அசோக் செல்வன் நடித்திருக்கும் படம் வேழம். தெகிடி படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்து ஜனனி இதிலும் நடிக்கிறார். ஐஸ்வர்யா மேனனும் இதில் நடித்திருக்கிறார்.

தற்போது இந்த படத்தின் ட்ரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படம் எதிர்வரும் ஜூன் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

U/A சான்றிதழ் பெற்றுள்ள இந்த வேழம் படத்தில் ராஜா கிருஷ்ணமூர்த்தி (கிட்டி), சங்கிலி முருகன் மற்றும் மராத்தி நடிகர் மோகன் ஆகாஷே என பலரும் நடித்துள்ளனர். கே4 க்ரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.கே.பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.ஜானு சுந்தர் இசையில் வேழம் உருவாகியுள்ளது.

வேழம் பட ட்ரெய்லரை காண: 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com