நாகேஷ் திரையரங்கத்தில் புத்தகம் விற்கிறார் ஆஸ்னா
தமிழில் சந்தானம் ஜோடியாக, ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ’இனிமே இப்படித்தான்’ படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஆஸ்னா ஜாவேரி. இதையடுத்து, ’மீன் குழம்பும் மண்பானையும்’ படத்தில் நடித்தார். இப்போது ஆரியுடன், நாகேஷ் திரையரங்கம், நகுலுடன் பிரம்மா. காம் படங்களில் நடித்துவருகிறார்.
இதுபற்றி ஆஸ்னா கூறும்போது, ’தமிழில் நல்ல கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். சவாலான வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கான கதைகளைத் தேடி வருகிறேன். நாகேஷ் திரையரங்கம் படத்தில் புத்தகங்கள் விற்கும் பெண்ணாக நடிக்கிறேன். ஆரி, ரியல் எஸ்டேட் புரோக்கராக வருகிறார். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது. பிரம்மா.காம் படத்திலும் சிறப்பான கேரக்டரில் நடித்துள்ளேன். மற்ற மொழிகளில் நடிக்கவில்லையா என்று கேட்கிறார்கள். தெலுங்கு, மலையாளத்தில் சில கதைகள் வந்துள்ளது. இன்னும் முடிவு செய்யவில்லை’ என்கிறார்.

